
சுலோவாகியாவில் நடக்கும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் காஜல் 76 கிலோ பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
பைனலில் சீனாவின் ஜிங்ரு சன்னை 7-0 என்ற கணக்கில் வீழ்த்திய காஜல், கடந்த ஆண்டு 72 கிலோ பிரிவில் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
62 கிலோ பிரிவில் இந்தியாவின் சவிதா வெள்ளிப்பதக்கமும், 55 கிலோ பிரிவில் ஹன்சிகா வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தோல்வியும் அடைந்தனர்.