
சீன அதிபர் ஷி ஜின்பிங் 10 ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசியின் அழைப்பின் பேரில் கெய்ரோவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவின் 70-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், சூயஸ் கால்வாய் பொருளாதார மண்டலத்தில் முதலீடுகளை அதிகரிக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
ஏற்கனவே எகிப்தில் 10 பில்லியன் டாலருக்கும் மேல் முதலீடு செய்துள்ள சீனா, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறி எகிப்துடன் உறவை வலுப்படுத்துவது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.