
சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கும் 'தமிழ் ஹாக்கி லீக் 2026' தொடரில் 12 ஆடவர் அணிகள் பங்கேற்கின்றன.
செப்டம்பர் 12 வரை 35 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில், முதன்முறையாக 4 அணிகள் பங்கேற்கும் மகளிர் மினி லீக் போட்டியும் நடத்தப்பட உள்ளது.
வெற்றி பெறும் அணிக்கு ரூ.1 லட்சம் மற்றும் இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.