
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் குவிகிறது.
கடந்த 10 நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், 140 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்ப்ளூயன்சா ஏ, ரைனோ வைரஸ் மற்றும் ஆர்எஸ்வி வைரஸ்கள் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.