
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, முதல்வர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதாகக் கூறி இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை செப்டம்பர் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தாம் மே 10-ம் தேதியே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், தற்போது எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை என்று முதல்வர் விஜய் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.