
பெங்களூரைச் சேர்ந்த Voxelgrids நிறுவனம், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹீலியம் இல்லாத 1.5 டெஸ்லா MRI ஸ்கேனரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் MRI கருவிகளின் விலை ரூ. 5 கோடி முதல் ரூ. 8 கோடி வரை உள்ள நிலையில், இந்த புதிய கருவி குறைந்த செலவில் தயாரிக்கப்படுகிறது.
டாடா டிரஸ்ட் மற்றும் ஜோஹோ நிறுவனங்களின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த கருவிக்கு, இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பான CDSCO வணிகப் பயன்பாட்டு அனுமதி வழங்கியுள்ளது.