
வாரத்தின் இறுதிநாளான இன்று இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது, இதில் சென்செக்ஸ் 330 புள்ளிகள் உயர்ந்து 77,264 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது.
நிப்டி 84 புள்ளிகள் உயர்ந்து 24,175 புள்ளிகளிலும், பேங்க் எக்ஸ் 650 புள்ளிகள் உயர்ந்து 64,963 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
பேங்க் நிப்டி மட்டும் 13 புள்ளிகள் சரிந்து 57,496 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்த நிலையில், ஒட்டுமொத்த சந்தை ஏற்றத்தால் முதலீட்டாளர்கள் லாபம் அடைந்துள்ளனர்.