
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து வியன்னா நோக்கிச் சென்ற விமானம் ஒன்று வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பல்கேரிய தலைநகர் சோஃபியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த இந்தச் சம்பவத்தின்போது அந்த விமானத்தில் 51 பயணிகளும் ஆறு விமான பணியாளர்களும் இருந்தனர்.
விமானம் தரையிறங்கும் வரை விமானப்படை போர் விமானம் ஒன்று பாதுகாப்பு அளித்ததாகவும் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.