
இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே, தனது இரண்டு தசாப்த கால சர்வதேச கிரிக்கெட் பயணத்திலிருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ரஹானே தனது டெஸ்ட் வாழ்க்கையில் 85 போட்டிகளில் விளையாடி 5,077 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 90 ஆட்டங்களில் 2,962 ரன்களும், 20 டி20 போட்டிகளில் 375 ரன்களும் எடுத்துள்ளார்.
ரஹானேவின் ஓய்வு அறிவிப்பைத் தொடர்ந்து, அவருடன் பல ஆண்டுகள் டிரெஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்து கொண்ட ரோகித் சர்மா, அவரது கடின உழைப்பைப் பாராட்டி சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.