
தமிழக சட்டசபை நடவடிக்கைகளை பார்வையிட கடந்த 28 நாட்களில் 32,055 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இது வரலாற்றில் இல்லாத அளவாகும்.
முந்தைய ஆண்டுகளில் ஆண்டு முழுவதும் சராசரியாக 10,000 முதல் 22,000 பேர் வரை பார்வையிட்ட நிலையில், தற்போது குறுகிய காலத்தில் அதிக பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் முன்னிலையில், இம்முறை 76 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சட்டசபை நிகழ்வுகளை நேரில் பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.