
ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் நிஜ்ரன் நகரை குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 11 பேர் காயமடைந்துள்ள நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏமன் உள்நாட்டுப் போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருவதால் இப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.