
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ராஜ் பி. ஷெட்டி, கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும் இளையராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவர் படத்திலிருந்து விலகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இளையராஜாவுக்குப் பதிலாக புதிய இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது, இருப்பினும் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.