
அமெரிக்க அதிபர் டிரம்ப், நாளை அமலுக்கு வரவிருந்த ரஷ்யா மீதான பொருளாதார நடவடிக்கைகளில் சலுகைகளை வழங்கி, கச்சா எண்ணெய் கொள்முதல் மீதான 100 சதவீதம் வரியை ரத்து செய்துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய நலனுக்காக ரஷ்ய எரிசக்தி ஏற்றுமதி தொடர்பான பொருளாதார தடைகள், கட்டுப்பாடுகள் மற்றும் வரிகளை டிரம்ப் ரத்து செய்துள்ள இந்த முடிவு இந்தியா மற்றும் சீனாவுக்கு நிம்மதி அளித்துள்ளது.
டிரம்ப் ரஷ்யாவுக்குச் சலுகைகள் வழங்கி இருப்பதுடன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை விமர்சித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.