
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்தக் காரணங்களால் கீமோ பால் விலகியதை அடுத்து அவருக்குப் பதிலாக ஷமார் ஸ்பிரிங்கர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 28 முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை மிர்பூரிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 5 முதல் 9-ஆம் தேதி வரை சில்ஹெட்டிலும் நடைபெற உள்ளது.