
மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் அபிஷேக் சாஹூ என்பவர் தள்ளுவண்டி கடையில் சாண்ட்விச் விற்பனை செய்து வருகிறார்.
முதலில் தொடக்கக் காலத்தில் ப்ரவுசிங் செண்டர் நடத்தி தோல்வியடைந்த அவர், யூடியூப் மூலம் சாண்ட்விச் தயாரிப்பது குறித்துக் கற்றுக் கொண்டுள்ளார்.
ரூ.30,000 கடன் வாங்கி 'ஹரி ஹர் சாண்ட்விச்' கடையைத் தொடங்கி, தற்போது நாள்தோறும் நூற்றுக்கணக்கான சாண்ட்விச்சுகள் விற்று மாதத்திற்கு ரூ.25 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.