
ஈரான் மின் உற்பத்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், வளைகுடா நாடுகளின் மின் இணைப்பைத் துண்டிப்போம் என ஈரான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஈரான், ஈராக், குவைத், கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் மின் வலையமைப்புகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.
ஜூலை மாதம் ஹார்முஸ் நீரிணையில் நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை அழிப்பதாக மிரட்டிய நிலையில் இந்த பதிலடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.