ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் பங்குச்சந்தை மூலம் ரூ.35,000 கோடி முதல் ரூ.38,000 கோடி வரை நிதி திரட்ட செபி அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் தனது டிஜிட்டல் பிரிவின் விரிவாக்கத்திற்காக இந்த மெகா ஐபிஓ (IPO) திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்த நிதி திரட்டல் மூலம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ரூ.9.5 லட்சம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.