
நரம்பு அழுத்த பிரச்சனைக்காக மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பாடகர் சோனு நிகாம், அறுவை சிகிச்சையின் போது முகமது ரபியின் பாடலைப் பாடி மருத்துவர்களை ஆச்சரியப்படுத்தினார்.
டாக்டர் நிதேஷ் சத்பாய் தலைமையிலான மருத்துவக் குழுவினரை உற்சாகப்படுத்த,
சுகானி ராத் தல் சுக்கி
என்ற பாடலை அவர் பாடியுள்ளார்.
வலி நிறைந்த அறுவை சிகிச்சையின் போதும் இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் அவர் பாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.