
சென்னை பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதிக மக்கள் தொகை கொண்ட பட்டினம்பாக்கத்தில் செயலகம் அமைப்பது போக்குவரத்து நெரிசலை உருவாக்குவதோடு, அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
110 விதியின் கீழ் அவசரகதியில் இந்த இடத்தை தேர்வு செய்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.