
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் 'ஓம்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் தனுஷைக் காண ரசிகர்கள் திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
படப்பிடிப்பு தளத்திற்கு வந்த தனுஷ், ரசிகர்களுடன் கைகுலுக்கி செல்பி எடுத்துக்கொண்டார்.
கோவிலூர் பேருந்து நிலையம் மற்றும் போளூர் அமிர்தி சாலையில் ரசிகர்கள் கூட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.