
குதிரை பேர வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்களுக்கு விலக்கு கோரி, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை காவல் நிலையத்தில் தினமும் இருவேளை கையெழுத்திடும் நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்க அவர் கோரியுள்ளார்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளதால் இந்த விலக்கு தேவை என மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.