
தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், 10.61 லட்சம் குடும்பங்கள் இணையதளம் வழியாக விவரங்களைச் சமர்ப்பித்துள்ளன.
சுமார் 1.5 லட்சம் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்ட இப்பணியில், குடியிருப்பாளர்களிடம் 33 முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன.
இரண்டாம் கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் நடைபெறும் என்று இயக்ககம் தெரிவித்துள்ளது.