
ஒன்றிய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் '80களின் ரெட்ரோ ஏஐ புகைப்பட டிரெண்டிங்'கில் இணைந்து தனது ஏஐ படத்தை பகிர்ந்துள்ளார்.
சாட்ஜிபிடி உட்பட பல்வேறு செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் பயனர்கள் தங்களின் தற்போதைய புகைப்படங்களை 1980-ஆம் ஆண்டுகளில் இருப்பது போல மாற்றியமைத்து வருகின்றனர்.
பியூஷ் கோயல் நீல நிற கோட், சூட், வெள்ளை நிறச்சட்டை மற்றும் சன்கிளாஸ் அணிந்து 80களின் திரைப்பட நடிகரைப் போன்ற தோற்றத்தில் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.