
இயக்குநர் பாரதிராஜாவின் கலைச் சாதனைகளைப் போற்றும் வகையில், அவரது சொந்த ஊரான தேனியில் ரூ.2.50 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், இது காலத்தினாற் செய்த நன்றி என தனது எக்ஸ் தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டார்.