
ஈரானின் பார்ஸ் மாகாணத்தில் 7.5 லட்சம் கோடி கன அடி கொள்ளளவு கொண்ட புதிய இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்த எரிவாயு வயலில் இருந்து 5.7 லட்சம் கோடி கன அடி எரிவாயுவை பிரித்தெடுக்க முடியும் என ஈரான் எண்ணெய் அமைச்சர் மோசென் பாக்னிஜாத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதார தடைகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட ஈரானின் எரிசக்தி தேவைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த கண்டுபிடிப்பு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.