
ஆக்ரா ரயில் நிலையத்தில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கூடுவாஞ்சேரியில் ஒரு பெண் கொல்லப்பட்டு சமைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கூடுவாஞ்சேரியில் நிஷா என்பவரின் வீட்டில் இருந்த பாத்திரத்தில் பெண்ணின் உடல் பாகங்கள் காய்கறிகளுடன் வேகவைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதால், அங்கு தங்கியிருந்த மர்ம ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், கண்ணாடி அணிந்த பெண் மற்றும் குறுந்தாடி வைத்த இளைஞர் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.