
சவூதி அரேபியாவின் அப்கேக் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது திங்கள்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் 5 முதல் 7 சதவீதம் வரை கையாளும் இந்த ஆலையை, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்கள் தாக்கியதாக சவூதி குற்றம்சாட்டியுள்ளது.
ஹவுதி அமைப்பினர் கிழக்கு-மேற்கு குழாய்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், சவூதி விமானப்படை யேமனில் உள்ள ஹவுதி இலக்குகள் மீது பதிலடி கொடுத்து வருகிறது.