
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ திரைப்படத்தின் வெளிநாட்டு திரையரங்க விநியோக உரிமத்தை பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ரூ.175 கோடிக்கு கைப்பற்றியுள்ளது.
இப்படத்தில் தீபிகா படுகோனே, சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மார்ஃப்ளிக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் வரும் டிசம்பர் 24-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.