
அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 299 ரன்கள் குவித்துள்ளது.
மழை காரணமாக 47 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில், டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய, ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்தது.
தொடக்க வீரர் இப்ராகிம் அதிகபட்சமாக 84 ரன்கள் குவிக்க, அயர்லாந்து அணியின் மார்க் அதிர் மற்றும் ஜெய் முந்திரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.