
பழநி தண்டபாணி மடம் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகிய மூவரின் ஜாமீன் மனுக்களை திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த நிலையில், சிபிசிஐடி போலீஸார் ஏற்கனவே இவர்களை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட மொத்தம் 11 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.