
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எதிர்காலத்தில் கேபிள் வலையமைப்புகள் அருகே தரவு மையங்கள் அமைப்பதைத் தவிர்த்து, மின்சார உற்பத்தி நிலையங்கள் அருகே அமைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மைக்ரோசாஃப்ட்டின் 4-ஆவது கிளவுட் வசதி மையத்தைத் தொடங்கி வைத்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார்.
இந்தியாவில் எண்ம மற்றும் AI உள்கட்டமைப்பு துறையில் 20.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது.