
பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் 'எல் நினோ' வெப்பமயமாதல் காரணமாக, சிலியின் அடகாமா பாலைவனத்தில் வழக்கத்திற்கு மாறாக கனமழை பெய்துள்ளது.
இதன் காரணமாக, பல்லாயிரக்கணக்கான வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கும் பூங்காடாக பாலைவனம் மாறியுள்ளது.
சுமார் 15,000 ஹெக்டேர் பரப்பளவில் மலர்கள் விரிந்து பரவி புதிய சுற்றுச்சூழல் மாற்றத்தை ஏற்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.