அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு போர் முடிவுக்கு வரும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், தேர்தல் முடிந்தவுடன் விலை வீழ்ச்சியடையும் என டிரம்ப் கூறியுள்ளார்.
நவம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பெரும்பான்மையை தக்கவைப்பது டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு முக்கியமானது என கருதப்படுகிறது.