
இந்தியா டுடே மற்றும் சி-ஓட்டர் நடத்திய 'மூட் ஆஃப் த நேஷன்' கருத்துக்கணிப்பில், 2029 மக்களவைத் தேர்தலில் பிரதமர் விஜய் ஆவதற்கு 9.2% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தக் கணிப்பில் நரேந்திர மோடி 48.7% ஆதரவுடன் முதலிடத்திலும், ராகுல் காந்தி 27.1% ஆதரவுடன் இரண்டாம் இடத்திலும், விஜய் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
இந்தியா கூட்டணியின் தலைவராக விஜய்க்கு 12.2% பேர் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், ராகுல் காந்திக்கு 29% பேர் ஆதரவு அளித்துள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.