/polimer-news/media/media_files/2026/10/28/vlcsnap-2026-10-28-17h13m10s679-2026-10-28-17-13-35.png)
இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படமான 'ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' படத்தின் உலகளாவிய பிரீமியர் ஷோ அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
ரூ. 4,000 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் சுமார் 59,000 திரையரங்குகளில் வெளியாகிறது.