
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்குத் தடை விதிக்க வலியுறுத்தியும் இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் இன்று பேரணி நடைபெறுகிறது.
இந்தப் பேரணியில் கட்சி, பாலினம், சாதி பாகுபாடு இல்லாமல் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைதள வீடியோவில் அழைப்பு விடுத்துள்ளார்.
பேரணியின் இறுதியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்தைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க இண்டியா கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.