
சூரி நாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘உசுரே நீதான் புள்ள’ இன்று வெளியிடப்பட்டது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார், இதில் சுஹாஸ், மகிமா நம்பியார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கடலோர மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.