/polimer-news/media/media_files/2026/09/17/ariyalurmilk-2026-09-17-13-08-52.jpg)
அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சில்லறையில் விற்பனை செய்யப்படும் பால் விலை லிட்டருக்கு ரூ.8 உயர்த்தப்பட்டு ரூ.54-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிலையங்களுக்கும் நுகர்வோருக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகை ஆவினுக்கு அனுப்பப்படும் பாலுக்கு மட்டுமே வழங்கப்படுவதால் இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.