
அர்ஜெண்டினாவுக்கு எதிரான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கேப் வெர்டே வீரர் லோபஸ் கப்ரால் அடித்த கோல், ரசிகர்களின் வாக்கெடுப்பில் தொடரின் சிறந்த கோலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் அடிக்கப்பட்ட 308 கோல்களில் இருந்து ரசிகர்கள் வாக்களித்ததில், 103-வது நிமிடத்தில் கப்ரால் அடித்த இந்த கோல் முதலிடம் பிடித்தது.
இந்த உலகக் கோப்பையில் கேப் வெர்டே அணி அர்ஜெண்டினா மற்றும் ஸ்பெயின் போன்ற வலுவான அணிகளுக்கு எதிராகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.