
மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட எஃப்சிஆர்ஏ திருத்தச் சட்ட முன்வரைவு 2026-ஐ நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே திரும்பப்பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதிகள், ஆகஸ்ட் 6, 2026 அன்று ஒன்றிய உள்துறை அமைச்சரைச் சந்தித்து இந்த மசோதாவைத் திரும்பப் பெறக் கோரிக்கை விடுத்தனர்.
எஃப்சிஆர்ஏ சட்டத்தின் பிரிவு 15-ஐ நீக்க வேண்டும் அல்லது இந்த மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்பது இக்குழுவின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.