
ஹங்கேரியில் நடைபெற்ற புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் ஆடவர் பிரிவில், இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அரை இறுதிப் போட்டியில் சக நாட்டு வீரர் சோட்ரானியை 9-11, 11-8, 11-7, 1-11, 12-10 என்ற செட் கணக்கில் வேலவன் செந்தில்குமார் வீழ்த்தினார்.
இறுதிப் போட்டியில் ஹங்கேரியின் பாலாஸ் ஃபர்காஸை 11-4, 11-2, 11-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வென்று வேலவன் செந்தில்குமார் கோப்பையைக் கைப்பற்றினார்.