/nakkheeran/media/media_files/2026/11/02/newx-2026-11-02-18-06-17.jpg)
தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் காலை 6-7 மற்றும் இரவு 8-10 மணி வரை பசுமைப் பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அரசு சான்றளிக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற நாட்களில் பட்டாசு வெடிக்க முழுமையான தடை உள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முதியோர் இல்லங்கள் அமைந்துள்ள 300 மீட்டர் சுற்றளவில் பட்டாசு வெடிக்கக் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது.