
தங்கப் பத்திர திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்காக, 2026 அக்டோபர் முதல் 2027 மார்ச் வரையிலான காலக்கட்டத்திற்கான 'முன்கூட்டிய முதிர்வு' அட்டவணையை ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2019-20, 2020-21 மற்றும் 2021-22 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட 32 சீரீஸ்களில் முதலீடு செய்தவர்கள், 8 ஆண்டு முதிர்வு காலத்திற்கு முன்பாகவே பத்திரங்களை பணமாக்கிக்கொள்ளலாம்.
முதலீட்டாளர்கள் தங்கள் பத்திரங்களின் சீரீஸை ஆர்.பி.ஐ. வலைதளத்தில் சரிபார்த்து, விண்ணப்ப கால வரம்பிற்குள் வாங்கிய வங்கி, தபால் அலுவலகம் அல்லது என்.எஸ்.டி.எல்., சி.டி.எஸ்.எல்., ஆர்.பி.ஐ. தளம் வழியாக கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.