/nakkheeran/media/media_files/2026/09/15/647-2026-09-15-09-46-44.jpg)
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, தவெக அரசின் சட்டத்துறை அமைச்சரின் பிறப்பு குறித்தும் அவரது தாய்மையையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து தவெக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து ஆபாசமாகப் பேசுதல் மற்றும் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 7 கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் ஆ.ராசா மீது போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.