/nakkheeran/media/media_files/2026/10/09/wb-bjp-celebration-2026-10-09-12-07-18.jpg)
மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக உள்ள ரெஜின்நகர் மற்றும் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ரெஜின்நகர் தொகுதியில் 3 வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சங்கரவ் சர்க்கார் 28,366 வாக்குகள் பெற்று தன் அருகாமை வேட்பாளரை விட 20,257 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
நந்திகிராம் தொகுதியில் 5 வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாஜக வேட்பாளர் ஹசி ராணி ராத் 55,665 வாக்குகள் பெற்று, எதிர்த்தரப்பு காங்கிரஸ் வேட்பாளரை விட 41,937 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.