
தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
காயத்திலிருந்து குணமடைய மருத்துவக்குழுவினர் 6 வார கால ஓய்வை பரிந்துரைத்துள்ளதால், அடுத்த மாதம் 24-ம் தேதி தொடங்கவுள்ள இந்த ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார்.
ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ள ரபாடா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதிலும் தற்போது சந்தேகம் எழுந்துள்ளதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.