
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.