
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஜிம்பாப்வே அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் கோப்பையை வென்றது.
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 43.3 ஓவர்களில் 169 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதுடன், அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா 68 ரன்கள் சேர்த்தார்.
இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 34.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.