இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான 36 வயது முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷமி, மொத்தம் 229 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளதுடன் அதில் வெளிநாடுகளில் மட்டும் 153 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கடந்த 2013-ல் நவம்பர் 6-ம் தேதி அன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், அதே நாளில் சரியாக 13 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஓய்வு முடிவை வெளியிட்டுள்ளார்.