
பிரான்ஸ் நாட்டின் தொழிலாளர் சட்டங்களை முறையாகப் பின்பற்றாத காரணத்திற்காக, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸுக்கு அந்நாட்டு அரசு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஊழியர்களின் வேலை நேரத்தை கண்காணிக்கும் டிஜிட்டல் அமைப்பில் துல்லியமின்மை மற்றும் கூடுதல் பணி நேரத்தை ஆவணப்படுத்துவதில் குறைபாடுகள் இருந்ததாக பிராந்திய தொழிலாளர் நல ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த அபராதம் நிறுவனத்தின் நிதிநிலை அல்லது வணிக செயல்பாடுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று இன்போசிஸ் நிர்வாகம் பங்குச் சந்தை அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது.